சென்னையில் கோவாக்சின் இரண்டாவது டோஸ் மட்டுமே! 

 
சென்னையில் கோவாக்சின் இரண்டாவது டோஸ் மட்டுமே!

சென்னையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொரோனா தடுப்பூசி மையங்களில் பொது மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடடப்படுகிறது. சப்ளையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் 15 இடங்களில் கோவாக்சின் தடுப்பூசிக்கு இரண்டாவது டோஸ் மட்டுமே போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவாக்சின் தடுப்பூசி ஏற்கனவே போடப்பட்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் போடுவதற்கே உரிய எண்ணிக்கையில் கைவசம் இருப்பு இல்லாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இரண்டு டோஸ்களும் போட்ட பிறகே நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்பதால் ஏற்கனவே கோவாக்சின் போடப்பட்டுள்ளவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசிகள் அனுப்பி வைக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி தயாரிப்பு மையத்திற்கு அனுமதி அளித்து கூடுதல் தடுப்பூசிகள் உற்பத்தி செய்யுமாறும் பல்வேறு தரப்பிலிருந்துபிரதமருக்கு கோரிக்கைகள் அனுப்பட்டுள்ளன.

செங்கல்பட்டு மையத்தில் தடுப்பூசி உற்பத்தி தொடங்கினால் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாமல் பிற மாநிலங்களுக்கும் தடுப்பூசிகள் அனுப்ப முடியும் என்று கூறப்படுகிறது.

From around the web