டாஸ்மாக் கடை இல்லை... யூடியூப் பார்த்து வீட்டில் சாராயம் காய்ச்சிய குடிமகன்கள்!!

 
Panruti

பண்ருட்டியில் யூடியூப் பார்த்து வீட்டில் சாராயம் காய்ச்சிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காமாட்சிபேட்டை , நத்தம் , திருவாமூர் உள்ளிட்ட பகுதிகளில் சிலர் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சுவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

சந்தேகத்தின் பேரில் அப்பகுதியைச் சேர்ந்த சில வீடுகளில் ஆய்வு செய்தபோது, கேஸ் ஸ்டவ்வில் குக்கர் வைத்து அதில் சிலிண்டர் டியூப் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி நூதன முறையில் சாராயம் காய்ச்சி வந்தது தெரியவந்தது.

சாராயம் காய்ச்சப் பயன்படுத்தப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், 5 பேரை கைது செய்தனர். விசாரணையில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால், யூடியூப் பார்த்து சாராயம் காய்ச்சி வந்தது தெரியவந்தது.

From around the web