எத்தனை பொய்யான தகவல்களை பரப்பினாலும் சசிகலாவால் அதிமுகவை வீழ்த்த முடியாது - எடப்பாடி பழனிசாமி

 
EPS

சசிகலா எத்தனை பொய்யான தகவல்களை பரப்பினாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பேரூராட்சியில் முன்களப் பணியாளர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அவர் அப்போது கூறியதாவது,

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழ்நாட்டு மக்களை திமுக ஏமாற்றி விட்டது வாக்குகளைப் பெறுவதற்காக பொய்யான வாக்குறுதிகளை கூறி ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் திமுக மக்களை ஏமாற்றி விட்டது.

சசிகலா எத்தனை பொய்யான தகவல்களை பரப்பினாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது; சசிகலா அதிமுகவில் இருந்த காலகட்டத்திலும் தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது.

கொரோனா தடுப்பூசிகளை நாங்கள் வேண்டுமென்றே வீணடிக்கவில்லை. ஆரம்பக் காலத்தில் விழிப்புணர்வு இல்லாமல் கொரோனா தடுப்பூசி வீணடிக்கப்பட்டது என கூறினார்.

From around the web