வாக்கு எண்ணிக்கை வேண்டாம், குடியரசுத் தலைவர் ஆட்சி வேண்டும்! கேட்கிறார் டாக்டர்.கிருஷ்ணசாமி!!

 
வாக்கு எண்ணிக்கை வேண்டாம், குடியரசுத் தலைவர் ஆட்சி வேண்டும்! கேட்கிறார் டாக்டர்.கிருஷ்ணசாமி!!

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும். தேர்தலை ரத்து செய்து விட்டு 6 மாதம் அல்லது 1 ஆண்டுக்கு குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் சத்தியப்பிரதா சாகுவை நேரில் சந்தித்து இந்த கோரிக்கையை வழங்கியுள்ளார் கிருஷ்ணசாமி. தமிழ்நாட்டில் நடந்து முடிந்த தேர்தலில் 500 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை பணம் வழங்கப்பட்டது. 234 தொகுதிகளிலும் பட்டவர்த்தமாக பணம் பட்டுவாடா செய்யப்பட்டு வாக்குகள் வாங்கப்பட்டுள்ளன. ஊழல்படுத்தப்பட்டு நடந்த இந்த தேர்தலை ஏற்றுக்கொள்ளக்கூடாது.

மே2 ம் தேதி வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும். உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு தலைமையில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலேயும் முறையாக ஆய்வு செய்து, எந்தெந்த வேட்பாளர்கள் பணம் கொடுத்தார்கள் என்று ஆய்வு செய்து சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த வேட்பாளர்கள் தேர்தல் கணக்கில் சேர்த்து கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அது வரையிலும் 6 மாதம் முதல் 1 ஆண்டு வரை குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தவேண்டும் என்று தேர்தல் ஆணையரிடம் தெரிவித்துள்ளோம் என்று டாக்டர்.கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

குடியரசுத்தலைவர் ஆட்சின்னா அது மறைமுகமா பாஜக ஆட்சி தானே! அங்க தான் உங்க கோரிக்கை மேல கொஞ்சம் சந்தேகம் வருது டாக்டர்!

From around the web