ஓபிஎஸ்சை கலந்தாலோசிக்காமல் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது... நெல்லையில் பரபரப்பு போஸ்டர்

 
ADMK

நெல்லையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுக தலைமையகம் முற்றுகையிடப்படும் என்று எழுதிய சுவரொட்டியால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தைக் கலந்து ஆலோசிக்காமல் எடுத்த முடிவால் தான் சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்ததாகக் கூறித் திருநெல்வேலியில் அக்கட்சி தொண்டர்கள் பெயரில் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன

அதிமுக மானூர் பகுதி தொண்டர்கள் என்கிற பெயரில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் ஆலோசனையைக் கேட்காமல் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளது.

பன்னீர்செல்வத்தின் ஆலோசனையைப் பெறாமல் நடவடிக்கைகளும் செயல்பாடுகளும் இருந்தால் அதிமுக தலைமையகம் முற்றுகையிடப்படும் என்றும் அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

From around the web