காலையில் பத்திரிக்கையில் செய்தி! மாலைக்குள் மக்களுக்கான தீர்வு தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

 
ஸ்டாலின்

பத்திரிக்கை ஒன்றில் வந்த செய்தி அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுத்து மலைவாழ் மக்களின் தேவைகளை நிறைவேற்றியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாட்டில் பெண்களுக்கு இலவசப் பேருந்துத் திட்டத்தை மே8ம் தேதி தொடக்கி வைத்த முதலமைச்சர், பயனாளிகளின் எண்ணிக்கையை தெரிந்து கொள்ளும் வகையில் கட்டணமில்லா சீட்டு அறிமுகப்படுத்தியுள்ளார். இதன் அடிப்படையில் 3 நாட்களில் 78 லட்சம் பெண்கள் பஸ்ஸில் பயணம் செய்துள்ளதாக போக்கு வரத்து அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள போக்குவரத்து அமைச்சர் ராஜ கண்ணப்பன், மேலும் ஒரு தகவலையும் கூறியுள்ளார். பழவல்லி என்ற மலைக்கிராமத்து மாணவர்கள் பேருந்து இல்லாமல் அவதிப்படுவதாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. இந்தச் செய்தியைப் பார்த்த முதலமைச்சர், போக்குவரத்து அமைச்சர் ராஜ கண்ணப்பனை உடனடியாகத் தொடர்பு கொண்டுள்ளார். அமைச்சர் ராஜ கண்ணப்பனும் அதிகாரிகளும் சம்மந்தப்பட்டப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு மதியத்திற்குள் அந்த மலைக்கிராமத்திற்கு பேருந்து செல்ல ஏற்பாடு செய்து விட்டனர் என்று கூறியுள்ளார்.

செய்தித்தாளில் வெளியான மக்கள் குறையை கவனித்து உடனடியாகத் தீர்வு கண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மலைவாழ் மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

From around the web