100 நாள் வேலைக்கு புதிய கட்டுப்பாடுகள்.. 

 
100 நாள் வேலைக்கு புதிய கட்டுப்பாடுகள்..

தமிழகத்தில் கொரோனா 2வது அலை அதி தீவிரமாக பரவி வருவதால் நாளுக்கு நாள் பாதிப்புக்களும் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக செய்து வருகிறது. கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பாதிப்பு எண்ணிக்கை உயர்த்து வருவதால் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு என்று பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது முதற்கட்டமாக அரசு ஊழியர்கள், முன்களப் பணியாளர்கள், காவல் துறையினர், மருத்துவ ஊழியர்கள் என பலருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. வரும் மே 1 ஆம் தேதிக்கு பின்னர் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி  செலுத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. 

இந்நிலையில் தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில் கொரோனா பரவல் காரணமாக இனிமேல் 55 வயதி கடந்தவர்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் அனுமதிக்க வேண்டாம் என்றும், மேலும் 100 நாள் வேலை திட்டத்தில் ஈடுபடுபவர்கள் கட்டாயம் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

From around the web