சென்னை வந்தடைந்தார் புதிய தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி!

 
Muneeswar-Nath-Bandari

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி சென்னை வந்தடைந்தார்.

சென்னை  உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து சென்னை  உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக முனீஷ்வர் நாத் பண்டாரி என்பவர் நியமனம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் சென்னை  உயர்நீதிமன்றத்தின் புதிய பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி அவர்கள் சென்னை வந்தடைந்தார். சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நாளை அவர் தலைமை நீதிபதியாக பொறுப்பு ஏற்க உள்ளார் என்பதும் அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பர் என்றும் கூறப்படுகிறது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய பொறுப்பு தலைமை நீதிபதிக்கு மூத்த வழக்கறிஞர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

From around the web