நீட் விலக்கு சட்ட மசோதா நிறைவேற்றம்.. அதிமுக, பாமக ஆதரவு; பாஜக வெளிநடப்பு

 
TN-Assembly

நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு கோரும் மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் அதிமுக, பாமக ஆதரவு தெரிவித்த நிலையில் நிறைவேறியது.

நீட் தேர்வின் பாதிப்பு குறித்து நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்தனர். இந்த அறிக்கை அடிப்படையில் சட்டப்பேரவையில் இன்று காலை மசோதாவை முதல்வர்  மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவின் மீதான் விவாதம் இன்று பிற்பகலில் நடைபெற்றது. அப்போது மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி கூறினார்.

இதற்கிடையே, நீட் தேர்வால் பல நன்மைகள் இருப்பதாக பேசிய பாஜகவின் நயினார் நாகேந்திரன், கூட்டணி கட்சிகளுக்கும், எங்களுக்கும் வெவ்வேறு கருத்துகள் இருப்பதாக கூறி சட்டப்பேரவையிலிருந்து வெளியேறினர்.

இதையடுத்து, தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது.

பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தும் வகையில் சட்ட மசோதா நிறைவேறியது. நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு பெறும் சட்டமசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக  வெளிநடப்பு செய்தது.

From around the web