சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி நியமனம்

 
Muneeswar-Nath-Bandari

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை, மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய உச்சநீதிமன்றம் கொலீஜியம் முடிவு செய்து ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

இதேபோல, அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்து வரும் முனீஸ்வர் நாத் பண்டாரியை, சென்னை உயர்நீதிமன்றம் மாற்ற உச்சநீதிமன்றம் கொலீஜியம் பரிந்துரை செய்தது.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் பொறுப்பிற்கு வரும் வரை தலைமை நீதிபதி பணிகலை தற்காலிகமாக நீதிபதி துரைசாமி கவனிப்பார் என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார்.

From around the web