மு.க.ஸ்டாலினின் மாபெரும் கனவு! நிறைவேறுமா?

 
மு.க.ஸ்டாலினின் மாபெரும் கனவு! நிறைவேறுமா?

தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் என்பது உறுதியாகி விட்டது. அவரும் தன்னுடைய மாபெரும் கனவை நிறைவேற்றத் தயாராக உள்ளாராம்.

மிசா காலத்தில் சிறைக் கொட்டடியில் அடிபட்டு, உதைப்பட்டு கிடந்த நேரத்திலேயே, தானும் தமிழ்நாட்டின் வரலாற்றில் இடம்பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவானதாம். இளைஞர் அணியை திறம்பட நடத்தினாலும், ஆட்சி அதிகாரம் கிடைப்பதற்கு நீண்ட காலம் காத்திருந்தார். மேயர், உள்ளாட்சித்துறை அமைச்சர், துணை முதலமைச்சர் என கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி தனது நிர்வாகத் திறமையை வெளிக்காட்டினார்.

தற்போது கட்சியும், ஆட்சியும் அவருடைய நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் அரிய வாய்ப்பு கிடைப்பதால், தமிழ்நாட்டை ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக மாற்றியேத் தீருவேன் என்ற கொள்கையோடு அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுக்கிறாராம். இளைஞர்கள் பாதி மூத்தவர்கள் பாதி என அமைச்சரவையில் இடம் பெறுகிறார்களாம், தமிழ்நாட்டின் நீண்ட காலத் திட்டமாக 7 உறுதி மொழிகளைக் கொடுத்துள்ள ஸ்டாலின், அதை நிறைவேற்றுவதற்கான திட்டங்களையும் மனதில் வைத்துள்ளாராம்.

பொதுமக்களின் அன்றாடப்பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக தனியாக ஒரு துறையும் உருவாகிறது. நகரங்களின் வளர்ச்சிக்கு இணையாக ஊரகப் பகுதிகளிலும் வளர்ச்சியை உருவாக்குவதில் உறுதியாக உள்ளாராம். அனைவருக்கும் கல்வி, உலகத்தரத்தில் கட்டமைப்பு, பொருளாதாரம், சமூகநீதி, பெண்கள் முன்னேற்றம் என நீண்ட பட்டியலை வைத்திருக்கிறாராம். சிறு, குறு தொழில்கள் மூலம் பொருளாதார வளர்ச்சி அனைவருக்கும் பரவலாகக் கிடைக்க வேண்டும் என்பது தான் ஸ்டாலினின் அடிப்படைத் திட்டங்களில் ஒன்றாம்.

மத்திய ஆட்சியை சட்டத்தின் மூலமாகவே கையாண்டு தமிழ்நாட்டிற்குத் தேவையான நிதி ஆதாரங்களைப் பெற்றுவிட முடியும் என்று நம்புகிறாராம். அடுத்த 10 ஆண்டுகளுக்கு ”ஸ்டாலினின் சாதனை” என்று சொல்லும் அளவுக்கு ஏராளமான கனவுகளோடு சட்டமன்றத்தில் புதிய பொறுப்பேற்க தயாராகி விட்டாராம் அடுத்த முதலமைச்சர்.

From around the web