மழை வெள்ள பாதிப்பு தெருக்களில் நடந்து சென்று பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்த மு.க.ஸ்டாலின்!

 
CM-stalin-visits-manali

சென்னை, மணலி புதுநகர் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும், தொடர் மழையால் பல்வேறு மாவட்டங்களிலும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தலைநகர் சென்னையில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.

தற்போதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மணலி புதுநகர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

மேலும் மணலி புது நகர் குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மணலி புதுநகர் பகுதி மக்களையும் நேரில் சென்று சந்தித்துள்ளார்.

From around the web