நடிகர் சூர்யாவை மிரட்டுவது ஏற்று கொள்ள முடியாதது - அமைச்சர் மனோ தங்கராஜ்

 
Mano-Thangaraj

நடிகர் சூர்யாவை மிரட்டுவது என்பது ஏற்று கொள்ள முடியாதது என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இயக்குநர் தா.செ.ஞானவேல் ‘ஜெய்பீம்’ என்ற திரைப்படத்தை, எழுதி இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரெஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.

படத்தின் கரு பலராலும் பேசப்பட்ட அதே சமயம், படத்தில் இடம் பெற்றுள்ள சில காட்சிகளும் சர்ச்சையாயின. இதையடுத்து நடிகர் சூர்யாவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கண்டங்கள் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பாமக சார்பில் நடிகர் சூர்யாவுக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்நிலையில் அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, “கன்னியாகுமரியில் வெள்ள பெருக்கால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தடுப்பு நடவடிக்கைகளால் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டன, பாதிப்பை சரிசெய்ய விரிவான திட்டத்தோடு முதல்-அமைச்சரை சந்தித்து சமர்பிக்க உள்ளோம். பலரும் கருத்து சுதந்திரம் பற்றி பேசி வருகிறோம்; நடிகர் சூர்யாவை மிரட்டுவது என்பது ஏற்று கொள்ள முடியாதது” என்றார்.

From around the web