தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்

 
Rain-report

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் திருவள்ளூர், ராணிப்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வரும் 22-ம் தேதி டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் 2 நாட்கள் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சிவகங்கை திருபுவனம், திருவண்ணாமலை, ஜமுனாமாத்தூரில் தலா 7 செ.மீ மழை பதிவானது. புதுகோட்டை, திருவள்ளூர் பள்ளிப்பட்டு, திருப்பத்தூர் வாணியம்பாடியில் தலா 6 செ.மீ மழை பதிவானது.

From around the web