பிரபல யூடியூப்பருடன் காதல்..! தோல்வியால் கல்லூரி மாணவி தற்கொலை; யூடியூப்பருக்கு போலீஸ் வலை..!

 
Youtube-Suriya

அம்மாவிடம் அடிப்பது போல வீடியோ எடுத்து போட்டு பிரபலமான யூடியூபர், தற்போது கல்லூரி மாணவியை காதல் வலையில் வீழ்த்தி ஏமாற்றி அவரை தற்கொலை செய்ய வைத்த வழக்கில் சிக்கியிருக்கிறார்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்த நவல்பட்டு கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை - அனுசுயா தம்பதியரின் ஒரே மகளான தனரக்ஷனா. இவர் திருச்சி தெப்பக்குளம் அருகே உள்ள ஹோலிகிராஸ் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேசன் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில், ஒளிப்பதிவில் ஆர்வம் கொண்ட தனரக் ஷனா பிராங்க் யூடிப்பர்கள் வெளியிடும் வீடியோக்களில் அவர்கள் கேமராக்களை கையாளும் விதம் குறித்து ஆய்வு செய்துள்ளார்.

அப்போது சென்னையை சேர்ந்த பிராங்க் பாஸ் என்ற பெயரில் யூடியூப்பில் பிராங்க் வீடியோக்களை வெளியிட்டு வரும் யூடியூப்பர் சூர்யா என்பவர் தனரக்ஷனாவுக்கு அறிமுகமாகியுள்ளார். ஒளிப்பதிவு தொடர்பாக பயிற்சி தருவதாக கூறி தனரக் ஷனாவுடன் சாட்டிங் செய்த சூர்யா அவரை காதல் வலையில் விழ்த்தியதாக கூறப்படுகின்றது.

தலையில் கலரிங் செய்து கொண்டு புள்ளிங்கோ போல வலம் வந்தாலும், தனது தாயிடம் முன்கூட்டியே பேசிவைத்துக் கொண்டு அவரை ஏமாற்றுவது போல நடித்து தர்ம அடிவாங்கியே பிரபலமான சூர்யா, மாணவி தனரக்ஷனா மட்டுமல்ல மேலும் சிலருடனும் பழகியதாக கூறபடுகின்றது.

PrankBoss

கடந்த 5-ந் தேதி சூர்யாவை சந்தித்த தனரக்ஷனா இது குறித்து கேட்டதாகவும் அதற்கு சூர்யா உரிய பதில் சொல்லாமல் அவரை திருப்பி அனுப்பியதாகவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் ஊர் திரும்பிய தனரக்ஷனா சூர்யாவை தொடர்பு கொள்ள முயன்ற போது, அவரது அழைப்பை சூர்யா ஏற்க்காமல் இருந்ததால் விரக்தி அடைந்த தனரக்ஷனா தனது கையில் நரம்பை அறுத்துக் கொண்டதோடு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது.

மாணவி தனரக்ஷனாவின் சடலத்தைகைப்பற்றி நவல்பட்டு காவல்துறையினர் விசாரித்து வரும் நிலையில், தங்கள் மகளை ஏமாற்றி வீட்டிற்கு அழைத்துச்சென்ற யூடியூப்பர் சூர்யாவும் அவனது தாயும் சேர்ந்து தாக்கி விரட்டியதால் தனரக்ஷனா தற்கொலை முடிவை மேற்கொண்டதாக அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து பிராங்க் பாஸ் யூடியூப்பர் சூர்யாவை நவல் பட்டு போலீசார் விசாரணைக்காக தேடி வருகின்றனர். வீட்டுக்குள் பிரச்சனையை உருவாக்குவது போல பிராங்க் செய்து பார்வையாளர்களை பெற்ற, சூர்யாவின் வீட்டிற்குள் உண்மையிலேயே தற்போது பிரச்சனை உருவாகி உள்ளது குறிப்பிடதக்கது.

From around the web