தமிழ்நாட்டில் மீண்டும் லாட்டரிச் சீட்டு விற்பனையா..? அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் பதில்

 
PTR

லாட்டரிச் சீட்டு விற்பனையை அனுமதிப்பதா? வேண்டாமா? என்பது தமிழ்நாடு மாநில அரசின் கொள்கை முடிவு என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2001-2002-ம் ஆண்டில் அதிகமான குலுக்கல் பரிசு சீட்டுகள் விற்பனையாகும் மாநிலமாகத் தமிழ்நாடு இருந்தது. குலுக்கல் பரிசுச் சீட்டு முடிவுகளை வெளியிடுவதற்கென்றே இரண்டு நாளிதழ்கள் வெளியாகிக் கொண்டிருந்தன. அந்தளவிற்கு மவுசு கூடியிருந்தது.

தினக்கூலிப் பணியாளர்களும், குறைவான வருமானம் உள்ள ஏழை மக்களும் லாட்டரி சீட்டை வாங்குவதால் குடும்பத்திற்கு உணவு, பொருளாதாரப் பாதிப்புகள் ஏற்படுகிறது என்று கூறி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 2003-ம் ஆண்டு தடைவிதித்தார்.

இந்நிலையில், லாட்டரிச் சீட்டு விற்பனையை அனுமதிப்பதா? வேண்டாமா? என்பது தமிழ்நாடு மாநில அரசின் கொள்கை முடிவு என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மீண்டும் லாட்டரிச் சீட்டு விற்பனை அனுமதிக்கப்படுமா எனச் செய்தியாளர்கள் வினவியதற்கு அவர் பதிலளித்தார். அப்போது, லாட்டரிச் சீட்டு, குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கு வரி விதிப்புக் குறித்துச் சரக்கு சேவை வரி கவுன்சில் ஒரு குழுவை அமைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

From around the web