தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே மதுபானம்: விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

 
TASMAC

விருதுநகர் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்க வேண்டும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க விரும்பும் அனைவரும் தாங்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றினை குறுஞ்செய்தியினை விற்பனையாளரிடம் காண்பித்தால் மட்டுமே மதுபானம் வழங்கப்படும்.

மேலும்,அனைத்து டாஸ்மாக் விற்பனையாளர்களும் தங்களிடம் மதுபானம் பெற்றுசெல்லும் அனைவரும் தடுப்பூசி செலுத்தி உள்ளதை உறுதி செய்த பின்னரே அவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யவேண்டும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும்,அவ்வாறு தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்யாமல் தனி நபருக்கு மதுபானம் விற்கப்பட்டிருப்பது தெரிய வந்தால் சம்மந்தப்பட்ட கடை விற்பனையாளர் மீது பேரிடர் மேலாண்மை சட்டப்பிரிவின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

From around the web