கசாப்பு கடைக்கு ஏற்றிச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டி..! பிரிய மனமின்றி லாரியை பின்தொடர்ந்த செல்லப்பிரானி!!

 
Thiruvarur

தன்னுடன் ஒன்றாக வளர்ந்த ஆட்டுக்குட்டியை, விட்டு பிரிய மனமின்றி, நாய் ஒன்று லாரியை பின் தொடர்ந்து துரத்திக் கொண்டே ஓடும் வீடியோ வெளியாகியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மாப்பிள்ளைகுப்பம் பணங்குடி, ஆண்டிபந்தல் பகுதியில் கொரோனோ ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் வீட்டில் வளர்த்து வந்த ஆடுகளை கறிக்காக தரகரிடம் அப்பகுதியினர் விற்றதாக தெரிகிறது.

வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணியான நாய் ஆட்டுடன் சேர்ந்து வளர்ந்து வந்த நிலையில், ஆட்டை கசாப் கடைக்காரர்கள் லாரியில் ஏற்றி சென்றனர். ஒன்றாக வளர்ந்த பாசத்தால் மனமுடைந்த நாய், தனது நண்பனான ஆட்டைக்குட்டியை பிரிய முடியாமல், லாரி போகும் வழியெல்லாம் கத்தி கொண்டு துரத்தி சென்றது.

லாரியை துரத்தி சென்ற நாயை பின்தொடர்ந்த வாகன ஓட்டிகள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.


 

From around the web