இந்தியாவில் உருமாறிய கொரொனாவை முறியடிக்கும் கோவாக்சின்! அமெரிக்க நிபுணர் ஃபௌசி தகவல்!!

 
இந்தியாவில் உருமாறிய கொரொனாவை முறியடிக்கும் கோவாக்சின்! அமெரிக்க நிபுணர் ஃபௌசி தகவல்!!

முழுக்க முழுக்க இந்தியத் தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசி இந்தியாவில் உருமாறியுள்ள கொரோனாவிலிருந்து பாதுகாக்கும் என்று அமெரிக்க தொற்றுநோய் வல்லுனரும், வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகருமான டாக்டர்.அண்டனி ஃபௌசி கூறியுள்ளார்.

இந்தியாவின் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி கோவாக்சின் ஆகும். இது முழுக்க முழுக்க இந்திய ஆராய்ச்சியினால் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றாகும். தற்போது இரண்டாவது அலையில் பரவும் கொரோனா வைரஸ் வீரியமிக்கதாக உள்ளது. இளைஞர்கள், சிறுவர்களையும் தாக்கும் மிக விரைவாகப் பரவும் இந்த வகை கொரோனாவுக்கு B.1.617 என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் கோவாக்சின் இந்த  B.1.617 பிரிவு கொரோனாவை முறியடிக்கும் ஆற்றல் மிக்கது என்று தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார் டாக்டர்.அண்டனி ஃபௌசி. மேலும். இந்தியா தற்போது மிகவும் மோசமான கொரோனா தொற்றுச் சூழலில் இருந்தாலும், தடுப்பூசி மூலம் இதிலிருந்து விரைவில் மீண்டு வரலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தியா முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மே 1 ம் தேதி முதல் தடுப்பூசி போடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசு சார்பில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்துள்ளார். 1 கோடியே 50 லட்சம் தடுப்பூசிகள் கொள்முதல் செய்வதற்கு தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

From around the web