மக்கள் பணி செய்யவிடாமல் தடுக்கும் கரூர் மாவட்ட ஆட்சியர்; உள்ளிருப்பு போராட்டத்தை துவங்கிய ஜோதிமணி எம்.பி

 
Jothimani

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜோதிமணி எம்.பி திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
 
எம்.பி. நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிக்காக வழங்கப்படும் நிதியை தொகுதியிலுள்ள தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க மாவட்ட நிர்வாகம் சார்பில் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். இந்த கூட்டம் கரூர் மாவட்டத்தில் கடந்த 6 மாதமாக நடத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தை நடத்ததுவதற்கு பல முறை வலியுறுத்தியும் இதுவரை கூட்டம் நடத்தப்படவில்லை என குற்றம்சாட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து ஜோதிமணி எம்.பி யிடம் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனையடுத்து மாவட்டம் ஆட்சியர் பிரபு சங்கர் தரையில் அமர்ந்து மனுவை வாங்கி பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டாத நிலையில், ஜோதிமணி எம்.பி. தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.


 

From around the web