பெரியாரை பின்பற்றுவதால் கமல் முட்டாள் தான்... கண்டெய்னர் டாய்லெட்டைக் கண்டாலே பயப்படும், இவர் உலக நாயகனா? எச்.ராஜா

 
பெரியாரை பின்பற்றுவதால் கமல் முட்டாள் தான்... கண்டெய்னர் டாய்லெட்டைக் கண்டாலே பயப்படும், இவர் உலக நாயகனா? எச்.ராஜா

கண்டெய்னர் டாய்லெட்டைக் கண்டாலே பயப்படும், இவர் உலக நாயகனா? என காரைக்குடி பாஜக வேட்பாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் 3 கட்ட பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பல்வேறு இடங்களில் கண்டெய்னர்களைக் கண்டாலே ஏதோ தேர்தல் மோசடி தான் நடக்கப்போவதாக திமுகவும், மக்கள் நீதி மய்யமும் மாறி மாறி குற்றச்சாட்டி வருகிறது. இதற்கு பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள செக்காணூரணியில் மலிவு விலை மக்கள் மருந்தக திறப்பு விழாவில் பங்கேற்ற எச்.ராஜா, எதற்கொடுத்தாலும் தமிழ் தமிழ் என தமிழை அழித்த கும்பல் தமிழைப்பற்றி பேசுகிறது. நடிப்பில் மட்டுமே கமல் விஷயம் பெரியதாய் தெரியும் மற்றபடி பெரியாரை பின்பற்றுவதால் கமல் முட்டாள் தான். கண்டெய்னர் டாய்லெட்டைக் கண்டாலே பயப்படும், இவர் உலக நாயகனா? என சகட்டு மேனிக்கு சாடினார்.

ஸ்டாலின் முட்டாள் என தெரியும் அதைப் போல பெரியாரை பின்பற்றுவதாக கூறும் கமலும் முட்டாள்தான். இன்றைக்கு முட்டாள்கள் உலகமாக தமிழ்நாடு மாற்றப்பட்டுள்ளது என கூறினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எச்.ராஜா, ஸ்டெர்லைட் ஆலையில் ஆயிரம் டன் கொள்ளளவிற்கு ஆக்ஸிஜன் தயாரிக்க முடியும் என்ற போது, அதை திறப்பதில் எந்த ஆட்சேபனையும் செய்ய வேண்டாம் எனத் தெரிவித்தார்.

From around the web