திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் கமல்ஹாசன்!!

 
MKS-Kamal

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்க உள்ள நிலையில், அவரை கமல்ஹாசன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து, அந்த கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் அடுத்த முதல்வராக பதவியேற்க உள்ளார். தேர்தலில் வெற்றி பெற்ற அவருக்கு பல்வேறு மத்திய, மாநில அரசியல் தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

அதில், “பெருவெற்றி பெற்றுள்ள ஸ்டாலினுக்கு மனப்பூர்வமான பாராட்டுகள். நெருக்கடியான காலகட்டத்தில் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கிறீர்கள். சிறப்பாகச் செயல்பட்டுத் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல என் வாழ்த்துகள்” எனப் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று திமுக தலைவர் ஸ்டாலினை, அவரது இல்லத்திற்கு சென்று நேரில் சந்தித்து கமல்ஹாசன் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது அவருடன் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உடன் இருந்தார்.

From around the web