பத்திரிக்கையாளர்களும் முன்களப் பணியாளர்களே! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!

 
பத்திரிக்கையாளர்களும் முன்களப் பணியாளர்களே! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!

பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறையில் பணிபுரிபவர்களும் முன்களப் பணியாளர்களாக கருதப்படுவார்கள் என்று புதிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது,

”மழை - வெயில் - பெருந்தொற்றிலும் உயிரைப் பணயம் வைத்து செய்தித்தாள்கள், காட்சி - ஒலி ஊடகங்களில் பணியாற்றி வருகின்ற ஊடகத் துறையினர் அனைவருமே தமிழகத்தில் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவர். முன்களப் பணியாளர்களுக்குரிய உரிமைகள் - சலுகைகள் அவர்களுக்கும் உரிய முறையில் வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.


 


 

null


 

From around the web