‘ஜெய்பீம்’ அனைவரும் பார்க்க வேண்டிய படம்; சர்டிஃபிகேட் கொடுத்த அண்ணாமலை!

 
Annamalai

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி உள்ள ‘ஜெய்பீம்’ திரைப்படம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இயக்குநர் தா.செ.ஞானவேல் ‘ஜெய் பீம்’ என்ற திரைப்படத்தை, எழுதி இயக்கியிருந்தார். நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள இந்தப் படம் ஓடிடியில் வெளியாகி  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

சென்னை சேத்துபட்டில், புத்தக வெளியீட்டு விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை, ஜெய்பீம் திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.

அதில் ஜெய்பீம் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் இருப்பினும் எந்த ஒரு சமுதாயத்தையும் காயப்படுத்தாமல் 'ஜெய்பீம்' திரைப்படம் உருவாக்கி இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ்நாட்டை பொறுத்தவரை பாஜக வலுவாக காலுன்றிவிட்டதாகவும் திமுகவுக்கு மாற்றுசக்தியாக உருவெடுத்துவிட்டதாகவும் அண்ணாமலை கூறியிருக்கிறார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் சிலர் சமூக வலைதளப் போரில் ஈடுபடுவதாகவும் அதனை சந்திக்க தாங்களும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

From around the web