தனித்தனியாக ஆய்வு செய்வதால் தனியாக செயல்படுகிறார்கள் எனக் கூறுவதா? ஒ.பன்னீர்செல்வம்

 
OPS

தனித்தனியாக ஆய்வு செய்வதால் தனியாக செயல்படுகிறார்கள் எனக் கூறுவது ஏற்புடையதல்ல என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பார்வையிட்டு  நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்.  அந்தவகையில் 3-வது நாளாக சென்னை தியாகராய நகர், சூளைமேடு உள்ளிட்ட  இடங்களை ஓ.பன்னீர்செல்வம் இன்று பார்வையிட்டார்.

அதனைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

“தமிழ்நாட்டில் பெய்த கனமழை, அதிக காற்று காரணமாக மீனவர்களின் படகுகள் சேதமடைந்துள்ளது. பொதுமக்கள் பெரும் துயரத்தை அடைந்துள்ளார்கள். தமிழ்நாடு அரசு இதில் தனி கவனம் செலுத்தி அவர்களுக்கான இழப்பீடை தர வேண்டும்.

நானும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் தனித்தனியாக நிவாரணம் வழங்குவது குறித்து விமர்சனம் எழுப்புகிறார்கள். எங்களுக்குள் எந்த விதமான பாகுபாடும் இல்லை. பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரண பொருட்களை தனித்தனியாக வழங்கி வருகிறோம். இதனை விமர்சிப்போர் பார்வையில் தான் தவறு உள்ளது” என்று கூறினார்.

From around the web