ஆட்சியைப் பிடிக்கிறதா திமுக? தேர்தலுக்குப் பிந்தைய  கருத்துக்கணிப்பு முடிவுகள்!

 
ஆட்சியைப் பிடிக்கிறதா திமுக? தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்!

ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது,

ஏபிபி - சி வோட்டர் நடத்திய கணிப்புகளின் படி திமுக கூட்டணிக்கு வுக்கு 160 முதல் 172 தொகுதிகள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ரிபப்ளிக் டிவி சிஎன் எக்ஸ் கருத்துக் கணிப்பின் படி திமுக கூட்டணிக்கு 160 முதல் 170  இடங்கள் கிடைக்குமாம்.  பி. மார்க் கருத்துக் கணிப்பின் படி திமுக அணிக்கு 165 முதல் 190 இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அதிமுக அணிக்கு 40 முதல் 65 இடங்கள் என்று பி.மார்க் கணிப்பு கூறியுள்ளது.  ஏபிபி - சி வோட்டர் கணிப்புகள் அதிமுக அணிக்கு 58 முதல் 70 இடங்கள் என்று கூறியுள்ளது. ரிபப்ளிக் டிவி சி என் எக்ஸ் கணிப்புகள் படி அதிமுகவுக்கு 58 முதல் 68 இடங்கள் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யத்திற்கு 2 இடங்கள் வரை கிடைக்கலாம் என்று  இந்தக் கருத்துக்கணிப்பில் தெரிகிறது. அமமுகவுக்கு 1 முதல் 6 இடங்கள் என்றும் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கிறது. நாம் தமிழர் உள்ளிட்ட பிற கட்சிகள் வெற்றி பெறும் தொகுதிகள் 0 முதல் 3 வரை இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்காளத்தில்  152 முதல் 164 தொகுதிகளைக் கைப்பற்றி மமதா பானர்ஜி மீண்டும் முதலமைச்சர் ஆவார் என்று ஏபிபி - சிவோட்டர் கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளது. பாஜகவுக்கு 109 முதல் 121 இடங்கள் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

From around the web