‘ஜெய் பீம்’ படத்திற்கு ஆதரவாக பழங்குடியின மக்கள்  நூதன ஆர்ப்பாட்டம்..!

 
Tribal-people-supports-suriya

பாம்புகள், எலிகள், தோல்பாவைக்கூத்து, பூம்பூம் மாடு உள்ளிட்டவற்றையும் நடனத்திற்காக சூர்யாவிற்கு நன்றி தெரிவிப்பதாக கூறி ஆதரவு போராட்டத்தை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இயக்குநர் தா.செ.ஞானவேல் ‘ஜெய் பீம்’ என்ற திரைப்படத்தை, எழுதி இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரெஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்தனர்.

இதில் குறிப்பிட்ட காட்சியில் வரும் காலண்டர் வன்னியர்களின் குறியீடு என்று கூறி அன்புமணி ராமதாஸ் மற்றும் பாமகவினர் தொடர்ந்து ஜெய் பீம் படத்துக்கு எதிராக போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் கடிதங்களையும் வெளியிட்டு வந்தனர். மேலும் படத்தின் இயக்குநர் மன்னிப்பு கோர வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர் நிலையில் நேற்றைய தினம் படத்தின் இயக்குநர் அது எதர்ச்சியாக நடைபெற்றது யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கம் இல்லை அப்படி புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிப்பதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழக பழங்குடியினர் கூட்டமைப்பின் சார்பில் பழங்குடியின மக்கள் இணைந்து பாம்புகள், எலிகள், தோல்பாவைக்கூத்து, பூம்பூம் மாடு உள்ளிட்டவற்றையும் நடனத்திற்காக சூர்யாவிற்கு நன்றி தெரிவிப்பதாக கூறி ஆதரவு போராட்டத்தை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பேசிய கூட்டமைப்பின் தலைவர் மகேஸ்வரி ஜெய் பீம் படத்தில் எங்களுடைய சமுதாயம் சந்திக்கும் இன்னல்களை சூர்யா அப்படியே காட்டியுள்ளார். தற்பொழுது சூர்யா எதிராக பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சூர்யாவுக்கு எதிராக அசம்பாவிதங்கள் நடக்கும் பட்சத்தில் அவர்கள் மீது பாம்பை கொண்டு எறிவோம் என்று ஆவேசமாக கூறினார்.

From around the web