வருகிற ஜனவரி 1 முதல் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு; சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு

 
CM-Stalin

அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வு ஏப்ரல் முதல் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஜனவரியிலேயே அகவிலைப்படி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். அதன்படி, இன்று 110-ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது,

அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வு 1.1.2022 முதல் வழங்கப்படும். அகவிலைப்படி அமல்படுத்தப்படுவதால் 16 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பயன்பெறுவார்கள். கடும் நெருக்கடியான சூழல் இருப்பினும் அகவிலைப்படி அமல்படுத்தப்படும்.

அரசுப் பணிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். அரசுப் பணியாளர்களுக்கு கூடுதல் கல்வித்தகுதிக்கான ஊக்கத் தொகை விரைவில் அறிவிக்கப்படும் என கூறினார்.

பட்ஜெட்டில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வு ஏப்ரல் முதல் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஜனவரியிலேயே அகவிலைப்படி வழங்கப்படும் என முதல்வர்  அறிவித்துள்ளார்.

From around the web