பாஜகவில் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, குஷ்புவுக்கு முக்கிய பொறுப்பு

 
Ponnur-Kushboo-HRaja

பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, குஷ்பு ஆகியோருக்கு பாஜகவில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

பாஜக தேசிய செயற்குழு என்பது கட்சி அமைப்பின் நிகழ்ச்சி நிரலை வடிவமைக்கும் முக்கிய ஆலோசனைக் குழுவாகும். இதில் 80 செயற்குழு உறுப்பினர்கள் தவிர, நிர்வாகத்தில் 50 சிறப்பு அழைப்பாளர்களும் 179 நிரந்தர அழைப்பாளர்களும் இருப்பார்கள்.

பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஜகவின் தேசிய செயற்குழு, தேசிய செயற்குழுவின் சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் நிரந்தர அழைப்பாளர்கள் ஆகியோரை நியமித்து அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உத்தரவிட்டுள்ளார்.

80 பேர் கொண்ட தேசிய செயற்குழுவில் பிரதமர் மோடி, மூத்த தலைவர்கள் லால் கிருஷ்ணா அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, முன்னாள் தேசிய தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து தேசிய செயற்குழு உறுப்பினராக முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதேநேரத்தில் தேசிய செயற்குழுவின் சிறப்பு அழைப்பாளர்களாக எச்.ராஜா, குஷ்பு ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயமும் தேசிய செயற்குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

From around the web