தமிழ்நாட்டில் மேலும் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 26 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்

 
Secretariat

தமிழ்நாட்டில் மேலும் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 26 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் புதிதாக திமுக தலைமையிலான மு.க. ஸ்டாலின் அரசு பொறுப்பேற்றதும் அரசு துறைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் மேலும் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 26 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி மத்தியச் சரக ஊழல் தடுப்புக் கண்காணிப்பாளராக இருந்த பொன்னி, சிலைத் திருட்டுத் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருந்த சுஜித் குமார் சென்னை போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். கட்டாயக் காத்திருப்பில் இருந்த துரை காவல்துறைத் தலைமையகத்தில் உதவி ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுவழங்கல் குற்றப் புலனாய்வுத் துறைக் கண்காணிப்பாளராக இருந்த சாந்தி மாநில மனித உரிமை ஆணையக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாநகரக் காவல் துணை ஆணையராக இருந்த மகேஷ் குமார் சேலம் மண்டல அமலாக்கத்துறைக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு எஸ்.பி. ஆக கிங்ஸ்லின் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

From around the web