கன்னியாகுமரியில் மீண்டும் தோல்வியை நோக்கி பொன்னார்! அப்பா கோட்டையை தட்டித் தக்க வைக்கும் மகன்!

 
கன்னியாகுமரியில் மீண்டும் தோல்வியை நோக்கி பொன்னார்! அப்பா கோட்டையை தட்டித் தக்க வைக்கும் மகன்!

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் மறைந்த எம்.பி வதந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் வெற்றி பெறுவார் என தந்தி டிவி எக்சிட் போல் தெரிவிக்கிறது.

கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார் வெற்றி பெற்றார். இதையடுத்து 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட எச்.வசந்தகுமாருக்கு காங்கிரஸ் வாய்ப்பு வழங்கியது.

இந்த தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி-யாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். அந்த தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் கன்னியாகுமரி நாடாளுமன்றம் உறுப்பினர் எச்.வசந்தகுமாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, கடந்த ஆண்டு அவர் மறைந்தார். இதையடுத்து கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து தமிழகம், கேரளம், புதுவை, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. அப்போதே காலியாக உள்ள கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கும் தேர்தல் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் மூத்த தலைவர்கள் விருப்பமனு அளித்தனர். இந்த நிலையில் எச்.வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்திற்கு சீட் கொடுக்கப்பட்டது. விஜய் வசந்தை எதிர்த்து பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார்.

இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு நேற்றைய தினம் வெளியானது. இதில் தந்தி டிவி கணிப்பில் கன்னியாகுமரி தொகுதியில் விஜய் வசந்த் வெல்ல வாய்ப்பிருப்பதாக கணித்துள்ளது. அதாவது பொன்னார் மீண்டும் தோல்வியை நோக்கி பயணிப்பதாகவே தெரிகிறது.

From around the web