கொரோனா பரவலைத் தடுக்க மேலும் சில கட்டுப்பாடுகள் விதிப்பு... தமிழக அரசு

 
கொரோனா பரவலைத் தடுக்க மேலும் சில கட்டுப்பாடுகள் விதிப்பு... தமிழக அரசு

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க மேலும் சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தற்போது தொற்று எண்ணிக்கை 13 ஆயிரத்தை கடந்த நிலையில், கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கடந்த 20-ந்தேதி முதல் தினமும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று இரவு 10 மணியில் இருந்து திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரை பொது முடக்கம் அமலுக்கு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க மேலும் சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் வருகிற 26-ம் தேதி அதிகாலை 4 மணி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள்:

  • திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கை விடுதிகள், பார்கள், பெரிய அரங்குகள் இயங்க அனுமதியில்லை
  • பெரியக் கடைகள், ஷாப்பிங் மால்கள் இயங்க அனுமதியில்லை
  • அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளில் அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்க அனுமதியில்லை
  • அனைத்து உணவகங்கள், தேநீர் கடைகளில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி
  • உணவகங்களில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை
  • அனைத்து மத வழிபாட்டுத் தலங்களில் மக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை
  • நாள்தோறும் பூஜைகள், சடங்குகளை கோவில் ஊழியர்கள் மூலம் நடத்த மட்டுமே அனுமதி
  • பொதுமக்கள் பங்கேற்பு இல்லாமல் குடமுழுக்கு நடத்த மட்டும் அனுமதி
  • திருமணம், திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது
  • இறுதி ஊர்வலங்கள், அதைச்சார்ந்த சடங்குகளில், 25 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது
  • அனைத்து விளையாட்டு பயிற்சி சங்கம், குழுமங்கள் செயல்பட அனுமதியில்லை
  • அனைத்து வெளிமாநிலங்களிலிருந்து தமிழகம் வருவோருக்கு இ-பதிவு கட்டாயம்
  • வெளிநாடுகளிலிருந்து விமானம், கப்பல் மூலம் வருவோருக்கு இ-பதிவு கட்டாயம்
  • இ-பதிவு செய்திருந்தால் மட்டுமே வெளிநாட்டிலிருந்து வருவோர், தமிழகத்திற்கு நுழைய அனுமதி
  • இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒருநாள் முழு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும்
  • வீட்டை விட்டு வெளியில் செல்வோர், கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும்
  • பொது இடங்களில் மாஸ்க் அணியாமல் நடமாட முயன்றால் அபராதம் விதிக்கப்படும்
  • பொது இடங்களில் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்காவிட்டாலும் அபராதம் விதிக்கப்படும்
  • தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் குறைந்தபட்சம் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்தே கண்டிப்பாக பணியாற்ற வேண்டும்
  • அனைத்து இ.காமர்ஸ் சேவைகள் வரையறுக்கப்பட்ட நேரக் கட்டுப்பாடுகளுடன் இயங்கலாம்
  • வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள், காய்கறி கடைகளுக்கு அனுமதியில்லை
  • தனியாக செயல்படும் மளிகை, காய்கறி விற்பனை செய்யும் பெரிய கடைகள் ஏசி வசதியின்றி இயங்க அனுமதி
  • ஒரே சமயத்தில் 50% வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்
  • மளிகை, காய்கறி கடைகள் மற்றும் இதர அனைத்து கடைகளும் உரிய வழிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி
  • விட்டாலும் அபராதம் விதிக்கப்படும்

From around the web