இதே நிலை நீடித்தால் ஈபிஎஸ், ஓபிஎஸ்-சை கட்சியை விட்டு நீக்குவோம்... கோவில்பட்டியில் பரபரப்பு

 
ADMK

"அஇஅதிமுக பொதுச் செயலாளர் சின்னம்மா தலைமையில் கழகம் இயங்க வேண்டும்" என கோவில்பட்டி அதிமுக நகர ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் சார்பில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி அதிமுக நகர ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட இணைச் செயலாளர் ஆறுமுக பாண்டியன், ஒன்றிய மாணவரணி செயலாளர் செண்பகராமன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தலைமையில் இயங்க வேண்டும். சசிகலாவே அதிமுக பொதுச் செயலாளராக தொடர்ந்து நீடிக்க வேண்டும்.

தொலைபேசி மூலம் உரையாடி வரும் சூழலில் தொண்டர்களை நிர்வாகிகளை கட்சியை விட்டு நீக்கும் ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோரின் செயலை வன்மையாக கண்டிப்பதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

கட்சி அடிப்படை விதிகளுக்கு மாறாக தொடர்ந்து இதே நிலை நீடித்தால் ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்குவதற்கு தொண்டர்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நேற்றைய தினம் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மேகதாட்டுவில் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டப்படுவதைத் தடுப்பீர், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துக, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளைக் குறைக்க ஒன்றிய அரசு திட்டம் வகுக்க வேண்டும், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ 1,000 வழங்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவோம் உள்ளிட்ட 6 தீர்மானங்களை அதிமுக நிறைவேற்றியுள்ளது.

சசிகலா ஈபிஎஸ்-க்கு எதிராக ஆடியோவில் பேசி வரும் நிலையில் கோவில்பட்டி அதிமுகவினர் ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோரை கட்சியை விட்டு நீக்குவது குறித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web