முன்மாதிரி தொகுதியாக்குவேன்! வெற்றியை கருணாநிதிக்கு சமர்ப்பித்த உதயநிதி ஸ்டாலின் உறுதி!

 
முன்மாதிரி தொகுதியாக்குவேன்! வெற்றியை கருணாநிதிக்கு சமர்ப்பித்த உதயநிதி ஸ்டாலின் உறுதி!

சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் கருணாநிதி ஓய்வகத்தில் ஆசி பெற்று விட்டு தந்தை மு.க.ஸ்டாலினிடம் வெற்றி ஆவணத்தைக் கொடுத்து ஆசி பெற்றார். முன்னதாக தன்னுடைய பிள்ளைகள் மற்றும் தங்கை செந்தாமரையின் பிள்ளைகளுடன் சென்று  எம்ய்ஸ் என்று எழுதப்பட்டுள்ள செங்கலை மு.க.ஸ்டாலினிடம் கொடுத்தார் உதயநிதி.

சேப்பாக்கம் வெற்றிக்காக ட்விட்டரில் கட்சியினருக்கு நன்றி தெரிவித்துள்ள உதயநிதி,

”சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த தலைவர் மு.க.ஸ்டாலின், அவர்களுக்கும், தலைமைக்கழக நிர்வாகிகளுக்கும், எனக்காக தேர்தல் பணிகளை மேற்கொண்ட அண்ணன் தயாநிதி மாறன் MP அவர்களுக்கும், மாவட்டப் பொறுப்பாளர் சிற்றரசு, பகுதி செயலாளர்கள் உள்ளிட்ட கழகத்தினருக்கும் நன்றி.

முதல்முறையாக தேர்தலில் போட்டியிட்ட என் மீது நம்பிக்கை வைத்து, 69,355 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியைத் தேடித்தந்த உங்களுக்காக உங்கள் வீட்டுப்பிள்ளையாக இருந்து கடமையாற்றுவேன் என என் தொகுதி மக்களுக்கு உறுதியளிக்கிறேன். இணைந்து பயணிப்போம்; முன்மாதிரி தொகுதியாக்குவோம்.

வங்கக் கடலோரம் தன் அண்ணனுக்கு பக்கத்தில் துயில் கொள்ளும் முத்தமிழறிஞருக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன்.” என்று கூறியுள்ளார்.

From around the web