தமிழ்நாடு மருத்துவ கட்டமைப்பு உருவானது எப்படி?

 
தமிழ்நாடு மருத்துவ கட்டமைப்பு உருவானது எப்படி?

மத்திய அரசு கொண்டுவரும் சுகாதார திட்டத்திற்கு தமிழ்நாட்டில் ஒரு மாவட்டம் தேர்வாகி, நிதி ஒதுக்கப்படும். தமிழக ஆட்சியாளர்கள், உலகவங்கிகளிடம் கடனை வாங்கி, அதே திட்டத்தைதமிழ்நாடு முழுதும் செயல்படுத்துவார்கள். கலைஞர் ஆட்சியில் இருந்தாலும் சரி, ஜெயலலிதா ஆட்சியில் இருந்தாலும் சரி, இது தொடர்ந்து நடக்கும்.

உதாரணமாக ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்த கரூர் மாவட்டத்தை தேர்வது செய்து மத்திய அரசு நிதி கொடுத்தால், திராவிட அரசுகள் அதே திட்டத்திற்கு கடன் வாங்கி தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தும். இபப்டி தமிழ்நாடு முழுமைக்கும் செயல்படுத்தும் முறையை கண்டறிந்தது கலைஞர் ; ஜெயலலிதாவும் இதையேச் செய்தார்.

இப்படி மத்திய அரசிடம் போராடி நிதி வாங்கி, உலக வங்கிகளிடம் கடன் வாங்கி, பார்த்துப் பார்த்து உருவாக்கியது தான் தமிழ்நாட்டு மருத்துவக் கட்டமைப்பு (Medical Infrastructure). ஒரே நாளில் வந்துவிடவில்லை ; 60-70 ஆண்டுகால உழைப்பு இது.

இதனால் தான், அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் நாடுகளை விட மருத்துவ அடர்த்தி தமிழ்நாட்டில் அதிகம் ; தமிழ்நாட்டின் மருத்துவ அடர்த்தி (Doctors per 1000 people) 4, மேலே இருக்கும் நாடுகளில் 4க்கும் கீழ்.

இந்திய அரசின் கீழ் இருக்கும் ஒரு மாநிலம், அமேரிக்கவுக்கு இணையாக மருத்துவ கட்டமைப்பை உருவாக்குவது மிகுந்த சவாலான செயல். இதனால் தான் லான்சட் போன்ற மருத்துவ இதழ்கள் தமிழ்நாட்டை பாரட்டுகின்றன.

- டான்.வி.எஸ்

From around the web