தமிழ்நாட்டில் இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை !!

 
Weather

தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் மற்றும் தெலங்கானா முதல் தென் தமிழ்நாடு வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர் அகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், விருதுநகர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு குமரிக்கடல் மற்றும் இலங்கையுன் தெற்கு கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் இந்த பகுதிகளில் மீன்பிடிக்க மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

From around the web