தமிழ்நாட்டில் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை!

 
school-leave

ரெட் அலர்ட்டை தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. மேலும் 4 நாள்களுக்கு மழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மிக பலத்த மழை பெய்யும் என்று 6 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில்  எந்தெந்த மாவட்டங்களுக்கு நாளை  பள்ளி, கல்லூரிகள் விடுமுறை என்ற  தகவல் வெளியாகி உள்ளது. அதில்,

ரெட் அலர்ட்டை தொடர்ந்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, புதுகோட்டை, விருதுநகர், அரியலூர், திண்டுக்கல், தேனி,  பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில்  பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்தது அம் மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

கனமழை காரணமாக மதுரை, திருவாரூர்,  ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web