கோவையில் கத்தியுடன் ரகளை செய்யும் அரை நிர்வான ரவுடி..! வைரல் வீடியோ!

 
Coimbatore

கோவையில் ரவுடி போல ஒருவன் பக்கத்து வீட்டுக்காரர்களை கத்தியை காட்டி மிரட்டி தாக்க முயன்ற சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

கோவை மாவட்டம் மசகாளிபாளையம் அம்மா உணவகத்துக்கு எதிரே உள்ள முல்லை நகரில் வசித்துவருபவர் மணிகண்டன். அந்த பகுதியில் ரவுடி போல வலம்வரும் இவன் அவ்வப்போது அந்த பகுதியில் குடிபோதையில் பயங்கர ஆயுதங்களுடன் தகராறு செய்வதும், அங்கிருக்கும் வாகனங்களை சேதப்படுத்துவதையும் வாடிக்கையாக செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திங்கட்கிழமை காலை அவரது வீட்டுக்கு எதிரே உள்ளவர்கள் இவனுடைய அடாவடி நடவடிக்கைகளை தட்டி கேட்ட பொழுது கற்களைக் கொண்டு கேட்டை உடைத்துக் கொண்டு தாக்க முயற்சி செய்துள்ளான்.

அங்கிருந்த இளைஞர் ஒருவர் காவல்துறைக்கு தகவல் கொடுப்பேன் என்று எச்சரித்ததும் கையில் கத்தியை எடுத்து வந்து அவரை குத்த முயன்றுள்ளான் அங்கிருந்த பெண்கள் தடுத்ததால் இளைஞர் தப்பித்தார்.

நேரம் செல்ல செல்ல அவனது அட்டகாசம் அதிகரித்ததால் அப்பகுதி மக்கள் செய்வதறியாது திகைத்துப்போய் காம்பவுண்டுக்கு உள்ளேயே பயந்து நின்று கொண்டிருந்தனர். மேலும் அப்பகுதியில் உள்ளவர்கள் இவனது அடாவடித்தனத்தை பார்த்து பயந்து வீட்டிற்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டதாக கூறப்படுகின்றது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிங்காநல்லூர் போலீசார், மணிகண்டனை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரனையில் மனிகண்டன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் கடந்த ஒரு வார காலமாக வீட்டில் தாய் தந்தையரை அடித்து ரகளை செய்து கொண்டு இருந்ததாகவும், அதன் பாதிப்பில் மற்ற தாக்குதலில் ஈடுபட்டதாகவும் தற்போது அவரை சமாதானப்படுத்தி நீலாம்பூரிலுள்ள மனநல மருத்துவமனையான தென்றல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தனர்.

பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பவன், பட்டபகலில் கத்தியை காட்டி மிரட்டுபவன் என தொடர் குற்ற செயலில் ஈடுபடும் நபர்களை மன நோயாளிகள் என்று போலீசார் அடையாளம் காட்டிவரும் நிலையில் சம்பந்தப்பட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களை கண்காணித்து கட்டுப்படுத்த தவறியவர்கள் மீதாவது வழக்கு பதிந்து நடவடிவடிக்கை கேற்கொள்ள வேண்டும் என்பதே அவர்களிடம் சிக்கியவர்களின் ஆதங்கமாக உள்ளது.

From around the web