அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்க கூச்சப்படுவதில்லை: நீதிபதி புகழேந்தி வேதனை..!

 
Madurai Highcourt

அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கும்போது கூச்சப்படுவதே இல்லை என, நீதிபதி புகழேந்தி தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில், மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வந்த ஆர்.கலைச்செல்வி (வயது 45) என்பவர் தனியார் வாகன நிறுவனத்தின் வாகன பதிவுக்கு லஞ்சம் கேட்டபோது அவர்கள் அளித்த புகாரின் பெயரில் தஞ்சை லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

RTO

இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்ட கலைச்செல்வி, ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, “அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கும்போது கூச்சப்படுவதில்லை. லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணை பெயரளவிலேயே உள்ளது. முறையான விசாரணை இல்லை. ஒருவரை கைது செய்தால் அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையிட வேண்டும்” என, நீதிபதி புகழேந்தி தெரிவித்தார்.

From around the web