தமிழகத்தில் 49 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் - தமிழக அரசு அறிவிப்பு

 
Secretariat

தமிழகத்தில் 49 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக திமுக தலைமையிலான மு.க. ஸ்டாலின் அரசு பொறுப்பேற்றதும் அரசு துறைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், 49 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதில் 13 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில்,

திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.யாக வி.பாலகிருஷ்ணன், சென்னை போக்குவரத்து இணை ஆணையராக பிரதிப் குமார், கோவை மேற்கு மண்டல ஐ.ஜி.யாக சுதாகர் பதவி உயர்வுடன் பணியிடமாற்றம் பெற்றுள்ளனர்.

திருச்சி சரக டிஜிபி ஆனி விஜயா, காவல்துறை டிஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அமலாக்கப்பிரிவு ஐஜியாக உள்ள செந்தாமரைக் கண்ணன், நெல்லை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

காவல்துறை நிர்வாக டிஐஜியாக இருந்த அன்பு, வேலூர் சரக டிஐஜியாகவும், நலத்திட்ட ஐஜியாக இருந்துவரும் சுமித்சரண், ரெயில்வே ஐஜியாகவும், சேலம் மாநகர காவல் ஆணையராக நஜ்முல் ஹோடா, திருப்பூர் காவல் ஆணையராக வனிதாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், திருச்சி சரஜ டிஐஜியாக ராதிகா, திண்டுக்கல் சரக டிஐஜியாக விஜயகுமாரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை கீழ்பாக்கம் துணை ஆணையராக கார்த்திகேயன், சென்னை வடக்கு போக்குவரத்து துணை ஆணையராக பிரதீப் ஆகியோரும் துணை கண்காணிப்பாளர் பதவியிலிருந்து துணை ஆணையராக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web