கடவுளே.. அம்மா உங்களுக்கு குரு மரியாதை சொல்லி குடுக்கல - அதிமுக நிர்வாகியை சாடிய குஷ்பு!

 
Kushboo

அதிமுக சேர்ந்த ஒருவரை நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பு ட்விட்டரில் கடுமையாக சாடியுள்ளார்.

நாடு முழுவதும் செப்டம்பர் 5-ம் தேதியான நேற்று ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. ஒவ்வொருவரும் தனது ஆசிரியர் அல்லது தனது குருவை வாழ்த்தி ஆசியும் பெற்றனர். அந்த வகையில் நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பு, முன்னாள் முதல்வர் கருணாநிதியை நினைவு கூர்ந்து ட்வீட் செய்தார்.

அதில், எனது வழிகாட்டியும் ஆசிரியருமான டாக்டர் கலைஞர் அவர்களுக்கு நான் நன்றி சொல்லியே ஆக வேண்டும். அரசியல் என்பது வெறுப்பும், விரக்தியும் இல்லை, மாறாக அரசியல் என்பது நம்பிக்கையும் தொண்டும் என்பதை எனக்கு கற்றுக் கொடுத்தவர் கலைஞர்தான் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவு அரசியல் அரங்கில் விவாதத்தை ஏற்படுத்தியது.
 
இதுகுறித்து அதிமுகவைச் சேர்ந்த ஒருவர் ட்விட்டரில், திமுகவுக்கு தயாராக இருக்கீங்க போல, இதுலாம் ஒரு பொழப்பா அக்கா... என கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள குஷ்பு, கடவுளே.. அம்மா உங்களுக்கு குரு மரியாதை சொல்லி குடுக்கல. பாவம் நீங்க. இதுதான் கலைஞருக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம். எவ்வளவு குறுகிய புத்தி உங்களுக்கு. நீங்கள் கற்றவர் என்றால் ஆசிரியர்களுக்கு மதிப்பளிப்பீர்கள், அது உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை என்று காட்டமாக பதிலளித்துள்ளார்.


இந்த விவகாரத்தில் பலரும் குஷ்புவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பதிவு செய்து வருகின்றனர்.

From around the web