தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி

 
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. மாநிலத்தில் நேற்று ஒரேநாளில் 12 ஆயிரத்து 652 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 37 ஆயிரத்து 711 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 89 ஆயிரத்து 428 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ்  முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் சென்னையிலுள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

From around the web