கொடைக்கானலில் முதன் முறையாக 23 வயதில் ஊராட்சி மன்ற தலைவர்.. இளம் பெண் தலைவருக்கு குவியும் வாழ்த்துகள்..!

 
Kodaikanal

கொடைக்கானல் மலை பகுதிகளில் முதன் முறையாக இளம்வயதில் தேர்தலில் போட்டியிட்டு ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றது இதுவே முதன் முறை என்று கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 138 மாவட்ட கவுன்சிலர், 1,375 ஒன்றிய கவுன்சிலர், 2,779 கிராம ஊராட்சி தலைவர், 19,686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வாக்குப்பதிவு கடந்த 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெற்றது.

இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியானது 74 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

ஆசியாவிலேயே பரப்பளவில் 3வது மிக பெரிய ஊராட்சி என்று கூறப்படும் கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சியில் முதன் முறையாக 23 வயது இளம்பெண் ஒருவர் ஊராட்சி மன்றத் தலைவருக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்ட வில்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 4 பேர் போட்டியிட்டனர். அவர்களில் 23 வயதான பாக்கிய லெட்சுமி என்ற பெண், 2 ஆயிரத்து 312 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

கொடைக்கானல் மலை பகுதிகளில் முதன் முறையாக இளம்வயதில் தேர்தலில் போட்டியிட்டு ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றது இதுவே முதன் முறை என்று கூறப்படுகிறது.

From around the web