வீடியோக்களை வெட்டி ஒட்டி தவறாகப் பரப்புவதை தடுக்க நிதியமைச்சர் பி.டி.ஆர் அதிரடி நடவடிக்கை!!

 
PTR-PalanivelRajan

தமிழ்நாட்டின் நிதி மற்றும் மனிதவள  துறையின் அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் பி.டி,ஆர்.பழனிவேல் தியாகராஜன் மீது அவதூறான செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. முந்தைய அதிமுக ஆட்சியின் நிர்வாகத்தில் சீர்கெட்டுப் போன தமிழ்நாட்டு நிதிநிலைமையை வெள்ளை அறிக்கை மூலம் தோலுரித்துக் காட்டினார்.  சட்டமன்றத்தில் 110 விதியின் படி அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல் சென்ற அதிமுக அரசை ஆதாரத்துடன் போட்டுடைத்தார்.  இது போன்ற காரணங்களால  பி.டி.ஆர் மீது அதிமுகவினருக்கு கடும் கோபம்.

மத்திய அரசின் நிதி நிர்வாகம் மோசமாக இருப்பதால் நாட்டின் பொருளாதாரம் படுபாதாளத்திற்குச் சென்றுள்ளதை வட இந்திய ஊடகங்களிலேயே அடித்துத் துவைத்துப் போட்டார். வட இந்திய ஊடகங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு பி.டி.ஆரின் பேட்டியை ஒளிபரப்பினார்கள். ஜி.எஸ்.டி யில் உள்ள குளறுபடிகள் மற்றும் மாநிலங்களுக்கான உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதை பி.டி.ஆர் சுட்டிக்காட்டியது பல மாநிலங்களிலிருந்தும் அவருக்கு ஆதரவைப் பெற்றுத் தந்தது. பாஜகவினரும் பிடிஆரை குறிவைத்துத் தாக்கத் தொடங்கினார்கள். நடக்காத கொளுந்தியா வளைகாப்பு விவகாரம் விஸ்வரூபமாக வெடித்தது.

நிதியமைச்சராகப் பொறுப்பேற்பதற்கு முன்னதாக பி.டி,ஆர் அளித்த பேட்டிகளின் வீடியோவில் சொல்லப்பட்ட சில கருத்துக்களை வெட்டி ஒட்டி, தற்போது அவர் பேசியது போல் திரித்தும் வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிகளும் நடைபெற்றது. இதை உணர்ந்த பி.டி.ஆர், நிதியமைச்சராகப் பொறுப்பேற்பதற்கு முன்னதாக ஊடகங்களில் பேசிய வீடியோக்களை தேதி வாரியாக மற்றும் அந்தந்த சூழல் குறித்தும் மீண்டும் தன்னுடைய சமூகப் பக்கங்களில் வெளியிடத் தொடங்கியுள்ளார். 

எப்போதும் தான் ஒரே நிலைப்பாட்டிலேயே இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் பி.டி.ஆர்.


 

From around the web