கல்லூரி மாணவர்களுக்கு இலவச டேட்டா கார்டை புதுப்பித்து தர வேண்டும் - ஈபிஎஸ் வேண்டுகோள்

 
EPS

விலையில்லா 2 ஜிபி டேட்டா கார்டுகளை புதுப்பித்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா 2 ஜிபி டேட்டா கார்டுகளை முந்தைய அதிமுக அரசு வழங்கியது.

தற்போது தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் கல்லூரிகள் திறக்கப்படாத காரணத்தால் ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறுகிறது.
 
இந்நிலையில, அதிமுக அரசால் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா 2 ஜிபி டேட்டா கார்டுகளை புதுப்பித்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு, எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரும்பாலான மாணவர்கள் ஏழ்மை மற்றும் நடுத்தர வகுப்பை சேர்ந்தவர்களாக இருப்பதால் மாதம் ரூ. 200 முதல் 400 வரை செலவு செய்து டேட்டா கார்டுகளை புதுப்பிக்க முடியாத நிலையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே அவற்றை புதுப்பித்து தருவதோடு, இந்த ஆண்டு புதிதாய் சேரும் மாணவர்களுக்கு டேட்டா கார்டுகளை வழங்கவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

From around the web