நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் நில அதிர்வு!!

 
நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் நில அதிர்வு!!

நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று மாலை லேசான நில அதிர்வு ஏற்பட்டது.

நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று மாலை 4.30 மணியளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இம்மாவட்டங்களில் உள்ள கடலோர பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டது.

கூடங்குளம், பெருமணல், காவல்கிணறு, பணகுடி, வள்ளியூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் நில அதிர்வு உணரப்பட்டதாக அப்பகுதியை மக்கள் தெரிவித்துள்ளனர்.

5 வினாடிகள் நீடித்த நில அதிர்வால் கட்டிடங்கள் சற்று அதிர்ந்தன. ஆனாலும், இந்த நில அதிர்வால் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. நெல்லை மற்றும் குமரி மாவட்டத்தில் ஏற்பட்ட நில அதிர்வால் மக்கள் சற்று கலக்கம் அடைந்துள்ளனர்.

From around the web