கோவில்பட்டியில் டிடிவி தினகரன் தோல்வி

 
கோவில்பட்டியில் டிடிவி தினகரன் தோல்வி

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோவில்பட்டி தொகுதியில் தோல்வியைத் தழுவியுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அமைச்சர் கடம்பூர் ராஜு 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

சமுதாய வாக்குகளை நம்பி களம் இறங்கினார் டிடிவி தினகரன் என்று கூறப்பட்ட நிலையில் டிடிவி தினகரன் அதிர்ச்சியான தோல்வியை சந்தித்துள்ளார். டிடிவி தினகரனின் தோல்வியால், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

தொகுதி வாரியாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பெற்றுள்ள வாக்குகளை வைத்துத் தான் டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவின் அரசியல் எதிர்காலம் இருக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

From around the web