திருமண நிகழ்வுகளில் முகக்கவசம் அணியாவில்லையா...? அபராதம் விதிக்கப்படும்

 
Mask

திருமண விழாவின்போது மண்டபங்களில் முகக்கவசம் அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில கட்டுப்பாடுகளையும் தமிழ்நாடு அரசு விதித்து வருகிறது.

இந்நிலையில், திருமண விழாவின்போது மண்டபங்களில் முகக்கவசம் அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருமண விழாவின்போது மண்டபங்களில் முகக்கவசம் அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனி குழுக்கள் அமைக்கப்பட்டு திருமண விழாவில் பங்கேற்போர் முகக்கவசம் அணிந்துள்ளனரா கண்காணிக்கப்படும் என்றும், திருமண நிகழ்வுகளில் புகைப்படம் எடுக்க முகக்கவசத்தை அகற்ற வேண்டாம் எனவும் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

From around the web