பஸ் பாஸ் வேண்டாம்! செப்டம்பர் 1 முதல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் - தமிழ்நாடு அரசு

 
Bus

செப்டம்பர் 1 முதல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் செப்டம்பர் 1-ந் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் திறக்கப்பட இருக்கின்றன. பள்ளி, கல்லூரிகளுக்கு கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறி முறைகளை விரிவாக அனுப்பி வைத்துள்ளன. அதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிக்கையில், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதால் வரும் 1-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கட்டணம் இன்றி பயணிக்கலாம் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

பேருந்து பயண அட்டை வழங்கப்படும் வரை சீருடை, பள்ளி அடையாள அட்டையை காண்பித்து இலவசமாக பயணிக்கலாம்  எனவும்  அரசு ஐடிஐ, பாலிடெக்னிக் மாணவர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் எனவும்  அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவுரைகள் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

From around the web