சென்னையில் ஒரு தொகுதியையும் அதிமுகவுக்கு விட்டு கொடுக்காத திமுக..! சி வோட்டர் கணிப்பு!

 
சென்னையில் ஒரு தொகுதியையும் அதிமுகவுக்கு விட்டு கொடுக்காத திமுக..! சி வோட்டர் கணிப்பு!

சென்னை மண்டலத்தில் உள்ள 37 தொகுதியையும் திமுகவே மொத்தமாக அள்ளும் என இந்தியா டுடே சி வோட்டர் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடக்கு, தெற்கு, கொங்கு, காவிரி டெல்டா, சென்னை ஆகிய பகுதிகள் உள்ளன. இவை சட்டமன்ற தொகுதிகளை பிரித்து மண்டலங்களாகவோ பகுதிகளாகவோ கொண்டு வர ஏற்படுத்தப்பட்டன.

இந்த நிலையில் சென்னை பகுதியில் 37 தொகுதிகள் உள்ளன. இதில் சில தொகுதிகள் அதிமுக, திமுகவின் கோட்டை என சொல்லப்படுகிறது. உதாரணமாக ராயபுரம் அதிமுகவின் கோட்டை என்கிறார்கள். அது போல் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி திமுகவின் கோட்டை என்கிறார்கள்.

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 6-ந் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி இடையே நேரடி போட்டி நிலவுகிறது. மக்கள் நீதி மய்யம் கூட்டணி, அமமுக கூட்டணி களம் காண்கிறது. நாம் தமிழர் தனியாக களம் இறங்கியுள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.

அதில் இந்தியா டுடே- சி வோட்டர் கருத்து கணிப்பு முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளன. வடக்கு, தெற்கு, மேற்கு, காவிரி டெல்டா ஆகிய பகுதிகளில் திமுகவே அதிக இடங்களில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது போல் சென்னை மண்டலத்தையும் திமுகவே வசப்படுத்திக் கொள்ளுமாம்.

சென்னையில் மொத்தம் 37 தொகுதிகளில் திமுக கூட்டணி 37 தொகுதிகளில் வெல்லும். அதாவது 37/37 எடுத்துவிடும் என்கிறார்கள். சென்னையில் மற்ற எந்த கட்சியும் வெல்லாது என்றும் கூறப்படுகிறது.

அது போல் வாக்கு சதவீதம் என பார்த்தால் திமுக கூட்டணி 58 சதவீதமும் அதிமுக கூட்டணி 26 சதவீதமும் பெறும். அமமுக ஒரு சதவீத வாக்குகளையும் மக்கள் நீதி மய்யம் 5 சதவீதம் வாக்குகளையும் மற்ற கட்சிகள் 10 சதவீத வாக்குகளையும் பெறும் என்கிறார்கள்.

From around the web